இலங்கையின் சட்டபூர்வமான நிலவரம் மற்றும் சமூக களங்கங்கள் காரணமாக, தன்பாலீர்ப்பின பெண்கள் , தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/விந்தையர் (LGBTIQ) சமூகம் தினந்தோறும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக LGBTIQ சமூக தனிநபர்கள் வேலைவாய்ப்பைத் தேடித் திரிவதையும் அதனை தக்கவைத்துக்கொள்வதையும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக அவர்கள் பணியிடங்களில் அதிக அளவு துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மற்றும் / அல்லது பதவி உயர்வு மறுக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் காட்டுகிறது. இது அவர்களின் பொருளாதார பாதுகாப்பை கடுமையாக சமரசம் செய்வதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.
மறுபுறம், திறமையான மற்றும் திறம் வாய்ந்த தொழிலாளர்களைக் கண்டுபிடிப்பது இலங்கையில் பல நிறுவனங்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. நாம் இப்போது வாழ்ந்து வரும் காலத்தைப் போல, குறிப்பாக நிச்சயமற்ற பொருளாதாரமானது உயர் ஊழியர்களின் வருவாய் நிலையை உயரத்துகிறது. பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தலை (இடங்கொடுத்தலை) ஊக்குவித்தல் (Diversity and Inclusion) மற்றும் LGBTIQ தோழமைப் பணியிடங்கள் இருப்பது என்பது வணிகங்களுக்கு அதிக உழைப்பு வருவாயுடன் தொடர்புடைய செலவுகளைத் தவிர்க்க உதவுகிறதாயிருக்கிறது. மேலும், இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சூழலில், சர்வதேச சந்தைகளில் போட்டியிடுவதற்கு பாகுபாடற்ற தராதரங்களைக் கடைப்பிடிப்பது அதிக முக்கியமாக இருக்கிறது.
இந்த இரண்டு காரணங்களுக்க்காகவும், EQUAL GROUND இலங்கையில் இந்த வகையான முதல் வலைத்தளமான “தேதுனு சவிய” வை அறிமுகப்படுத்தியுள்ளது, இது வேலை தேடுபவர்களையும் வேலை வழங்குபர்களையும் இணைக்க பாதுகாப்பான மெய்நிகர் இடத்தை வழங்குகிறது.
இது LGBTIQ ஊழியர்களுடன் சிநேகமுடைய பெருநிறுவன கூட்டாளர்களுடன் வேலை வாய்ப்புகளைக் காணக்கூடிய ஒரு மன்றத்தை இது முன்வைக்கிறது மற்றும் EQUAL GROUND லிருந்து {பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தல் (இடங்கொடுத்தல்) (Diversity & Inclusion)} சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த மன்றம் பெருநிறுவன கூட்டாளிகளுக்கு அவர்களின் வேலை வெற்றிடங்களை இலக்கு செய்து பார்வையாளர்கள் பார்க்கும்படி விளம்பரப்படுத்த வாய்ப்பளிக்கிறது. எவ்வாறேனும் தனித்துவமாக, இது LGBTIQ சமூக உறுப்பினர்களுக்கு இலங்கையில் உள்ள LGBTIQ நட்பு வணிகங்களுக்கு தங்கள் வேலைவாய்ப்பு திறன்களை விளம்பரப்படுத்த அனுமதிக்கிறது. சாத்தியமான வேலை தேடுபவர்களுக்கான திறன் மேம்பாட்டு தொகுதிகள் மற்றும் பெருநிறுவன துறைக்கான {பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தல் (இடங்கொடுத்தல்) (Diversity & Inclusion)} பயிற்சியும் இதில் அடங்குகிறது.
“தேதுனு சவிய” வை அணுகுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்
இலங்கையில் {பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தல் (இடங்கொடுத்தல்) (Diversity & Inclusion)} பயிற்சி மற்றும் உணர்திறன் திட்டங்களை நடத்தும் ஒரே ஒரு LGBTIQ அமைப்பு EQUAL GROUND ஆகும். மேலதிக தகவல்களுக்கு எங்களை, மின்னஞ்சல் media@equalgroundsrilanka.com அல்லது +94114 334 279 வழியாக தொடர்பு கொள்ளவும்.