
பதிலளித்தவர்களில் 58% பேர் வாய்மொழி துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் 31% பேர் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளனர். 44% பேர் அதிக பழிவாங்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் அஞ்சுகிறதினால் இதுபோன்ற துன்புறுத்தல்களை நிர்வாகத்திடம் தெரிவிக்கத் தயாராக இல்லை என்று கூறினர். துரதிர்ஷ்டவசமாக, பதிலளித்தவர்களில் 23% பேர் உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் காரணமாக தங்கள் வேலையை விட்டு வெளியேறியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
பணியிடங்களில் இத்தகைய பாகுபாடு LGBTIQ தனிநபர்களின் பொருளாதார பாதுகாப்பைப் பாதிக்கின்றது. இலங்கையில் பணியிடங்களில் தன்பாலீர்ப்பின, ஈர்பாலீர்ப்பின, மாற்றுபாலீர்ப்பின வெறுப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவது கட்டாயமாகும்.
முழு அறிக்கையைப் படிப்பதற்கு

நன்றி!
