EQUAL GROUND சமீபத்தில் இலங்கையின் பெருநிறுவனத் துறையை LGBTIQ சமூகத்தின் உறுப்பினர்களுக்கு வரவேற்கத்தக்க மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்தது, அதன் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் இணைத்துக்கொள்ளல் பற்றிய மின் தொகுதியை அறிமுகப்படுத்தியது. பாலியல் நாட்டம், பாலின அடையாளம் அல்லது பாலின வெளிப்பாடு (SOGIE) தொடர்பான தலைப்புகளை ஆராயும் மின்-தொகுதியானது, விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் தங்கள் பணியாளர்களிடையே மிகவும் மாறுபட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படலாம். EQUAL GROUND, மின்-கற்றல் (e-Learning) உள்ளடக்க மேம்பாட்டு நிறுவனமான Layup உடன் இணைந்து இப்பாடத்திட்டத்தை உருவாக்கியது.
இந்த மின்-தொகுதியின் (e-module) வெளியீடு மார்ச் 07, 2024 அன்று நடைபெற்றது, இதில் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் உரையாற்றிய EQUAL GROUND இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொசன்னா ஃபிளமர்-கல்தேரா உடன், இந்த மின்-தொகுதி (e-module) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய இரண்டு நபர்கள், இத்திட்டத்திற்கான ஆலோசகர்களாகச் செயற்பட்டனர்: குமுது முனசிங்க அவர்கள் – இவர் சமூக தொழில்முனைவோர், பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்திற்கான குழு முன்னணியாளரும், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் மூத்த உதவி துணைத் தலைவருமானவராவார், அத்துடன், கயானி ரணசிங்க அவர்கள், இவர் கூட்டுத் தொடர்பியல் தலைவர், செயற்பாட்டுத் தலைவர் – மற்றும் ஆலோசகர் – பாலினம் மற்றும் தொழில்பாட்டு நிபுனராவார். இத்திட்டத்தில் இவர்கள் இருவரது ஆலோசனைகள் இன்றியமையாததாக இருந்தது.