அனைத்து நண்பர்களின் குரல்களும் தன்பாலீர்ப்பின பெண்கள், தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/புதுமையினர் ஆகிய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கின்றன. அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள், எங்கள் பெற்றோர், உறவினர்கள், எங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், சக ஊழியர்கள் மேலும் பலர். இருப்பினும், LGBTIQ அல்லாத நபர்கள் மட்டுமல்ல, LGBTIQ நபர்களும் கூட தங்களது சக சமூக உறுப்பினர்களுக்காக ஒரு கூட்டாளியாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும்.
ஒரு நல்ல நண்பன் என்பவர் பெரும்பான்மையினரின் சலுகைகளை உணர்ந்து, சிறுபான்மையினரின் போராட்டங்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் நியாயமான செயலுக்காக வாதிடுகிற ஒருவரைக் குறிக்கிறது. ஒரு நல்ல நண்பன் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக்கூற முடியாத போதிலும் திறந்த உரையாடல்களில் ஈடுபடுவது, கேள்விகளைக் கேட்டு விவாதிப்பது, உங்கள் சொந்த சார்புகளையும் அறியாமையையும் அங்கீகரித்து ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளிவருதல் போன்றவைகளே இதன் பொருளாகும். தன்பாலீர்ப்பின பெரியவர்கள் (வயது வந்த) இருவர்களுக்கிடையில் நடக்கின்ற பாலியல் செயலானது ஒரு குற்றச் செயலாக கருதப்படுவதற்கு மாறாக அதனை நியாயப்படுத்தும் பயணத்தில் LGBTIQ நபர்களுக்கு சம உரிமைகளையும் ஏற்றுக்கொள்ளலையும் பெற்றுக்கொடுப்பதில் இந்த வகையான நண்பர்களின் பங்கு அதி முக்கியம் வகிக்கிறது.
நல்ல நண்பர்களின் ஆதரவு இல்லாமல் எங்களால் LGBTIQ நபர்களுக்கு எதிரான பாகுபாடு, களங்கம், ஓரங்கட்டப்படுதல் மற்றும் வன்முறை ஆகியவற்றை இல்லாதொழிக்க முடியாது. நல்ல நண்பர்களின் முக்கியத்துவம் என்றால் என்ன அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்துவதுடன் LGBTIQ சமூகத்துடன் நல்லாதொரு நட்புறவை ஏற்படுத்துவதற்கு EQUAL GROUND ஒரு பரந்த பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது; இது ‘ALLY FOR EQUALITY’ என்ற கல்வி புகட்டும் சிறு புத்தகத்தையும், ‘I AM A PROUD ALLY’ என்ற சிறு காணொளித் தொடரையும் உள்ளடக்கி இருக்கிறது. இந்த சமூக ஊடக தொடரில் (நீங்களும் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், தயவுசெய்து உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இந்த எளிய செய்தியாகிய “நான் ஒரு பெருமைமிக்க நண்பன்” என்ற வீடியோ பதிவை செய்து media@equalgroundsrilanka.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்).