#PronounsMatter
பிரதிப்பெயர்கள் என்பவை நாம் எவ்வாறு மற்றவர்களை குறிப்பிடுகிறோம் என்பதில் அடங்கியுள்ளது. இலங்கையிலும், உலகிலுள்ள ஏனைய பகுதிகளிலும் பிரதிபெயர்களின் பாவனை யாவும் பாலினத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளது. நாம் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பிரதிபெயர்களாவன அவள்/ அவளுக்கு/அவளுடைய மற்றும் அவன்/அவனுக்கு/அவனுடைய, ஆகியன அவரவரது பாலினத்தைக் குறிக்கும் சொற்களாகும். இவை பொதுவாக பொதுபாலின (தங்களது தனிப்பட்ட பாலின அடையாளமும் பாலின உணர்வும் பிறப்பின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் ஒத்திருப்பதாக நினைக்கும் நபர்கள்) நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எப்படியாயினும் தற்போதய நிலவரப்படி பாலினத்தை மையமாகக் கொள்ளாமலேயே பிரதிப்பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. இவைகள் பாலின சார்பற்ற பிரதிப் பெயர்கள் என்றே அழைக்கப்படுகின்றன. அவர்கள்/ அவர்களுக்கு/அவர்களுடையது ஆகியன பாலின சார்பற்ற பொதுப் பிரதிப்பெயர்களாகும்.
நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் தோற்றம், ஆடை உடை, பெயர் மற்றும் பிற வெளிப்புற காரணிகளைக் கொண்டு எப்போதும் அவர்களின் பாலினம் அல்லது அவற்றின் பிரதிபெயர்களைக் கணிக்க வேண்டாம். எனவே, நம்மால் ஒருவரின் பிரதிபெயர்களை ஒருபோதும் எடைபோட்டுக் கணிக்க முடியாது. நாம் ஒருவரை முதல்முறையாக சந்திக்கும் போது, நமது பிரதிப்பெயர்களுடன் நம்மை அறிமுகப்படுத்தி அவர்களின் பிரதிபெயர்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும். தவறான பிரதிபெயருடன் யாராவது அழைக்கப்பட்டால், அது பெரும்பாலும் அவர்களை அவமரியாதை செய்தல், ஓரங்கட்டல், ஒதுக்கி வைத்தல், தள்ளிவைத்தல் அல்லது இழிவுபடுத்தல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். ஒருவரின் பிரதிபெயர்களை சரியாகப் பயன்படுத்துவது என்பது அவரவரது பாலின அடையாளத்துக்கு மரியாதை செய்வதற்கான ஆரம்ப கட்டமாகும்.
LGBTIQ சமூகத்திற்கும், அதன் நல்ல நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் படிப்பினைக்காக, EQUAL GROUND அமைப்பானது பிரதிபெயர்களை சரியாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
Facebook, Instagram, Twitter போன்ற சமூக தளங்களில் நீங்கள் இந்த பிரச்சாரத்தைக் காணலாம்.